ஒலியும் ஒலியும்

வான் ஒலியை மனிதன் உணராத காலம்
காதலர்கள் நிலவின் குளிரொளியில்
பூக்கள் பூத்த ஏரிக்கரையில் ஓடி உலாவி
ஆடிப் பாடி காதலித்தனர் ....

வானொலியை உணர்ந்தான் ரேடியோவில்
மலர்ப் பூங்காவெல்லாம் மயக்கும் அந்தியில்
காதலர்ப் பூங்காவானது அங்குவந்த காதலர்
புல்தரையிலும் இருக்கையிலும் அமர்ந்து
கொஞ்சிக் குலாவினர் போக ரேடியோ
ஒலிபரப்பில் வந்த காதல் பாட்டுக்கு
பின் தொலைப்பேசிகள் இரு முனையில்
விடாது பேசியும் பாடியும் காதலித்த காதலர்...

இன்றோ டிஜிட்டல் காதல்....
பரிமாற்றம் வாய் ஏதும் பேசாது
கைமட்டும் பேசும் மொபைல் போன்கள்
வேண்டும் வாயும் பேசும்
திருமனக் கூடம் இல்லை மக்கள் இல்லை
ஐயர் இல்லை ஓமம் இல்லை
ஆன்லைன் உலகம் 'வீடியோ கல்யாணம் ......
மாலை மாற்றம் கூட இல்லை ..

நாளை வாழ்வில் எந்த ரூபம் எடுக்கும் ஒலி
யாரறிவார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-May-20, 8:11 pm)
பார்வை : 45

மேலே