நகைச்சுவைத் துணுக்குகள்
அம்மா: அவனுக்கு வந்திருக்கிறது வைரஸ் ஜூரமாம்.
பாட்டி: நான் அவன் கிட்டே அப்பவே சொன்னேன், 'கம்ப்யூட்டர்லே வைரஸ் வந்திருக்கின்னு உங்க அண்ணா சொல்லிண்டு இருந்தான்டா. இப்ப கம்ப்யூட்டர்லே போய் விளையாடாதேடா' ன்னு. சொன்னா கேட்டாத்தானே. இப்பப் பாரு அவனை வைரஸ் ஜுரம் தொத்தினுடுத்து.
********************
என்னங்க, இங்கே எச்சில் துப்பவும்னு போர்டு போட்டிருக்கே, இந்தப் போர்டைப் பார்க்காமலே போறீங்களே.
அதைப் பார்த்து நான் என்ன பண்ணணும்?
இங்கே வந்து எச்சில் துப்பிட்டுப் போங்க.
?????????
********************
அரசாங்கம் திட்டக் குழு ஒண்ணு அமைக்கப் போறாங்களாமே.
இது என்ன அநியாயமா இருக்கே.
இதுலே என்ன அநியாயம் இருக்கு?
திட்டறதுக்குக் கூட ஒரு குழுவா?
********************
என் குழந்ழையை நான் சிரமப்பட்டு ஆராரோ பாடி தூங்க வைக்கிறேன். ஆனா பக்கத்து வீட்டிலே யார்யாரோ பாடி குழந்தையோடே தூக்கத்தைக் கெடுத்துடறாங்க.
********************