ஆசை

நிலவொளியில்
ஒளிந்து கொள்ள ஆசை !
நட்சத்திர
குவியலில் படுத்துறங்க ஆசை !
காற்றாய் மாறி
உன் கன்னத்தில் முத்த மிட ஆசை !
கனவுக்குள் நுழைந்து
உன்னை திருடிக்கொள்ள ஆசை !
விழித்து எழும் வேலையில்
உன் விழியை பார்க்க ஆசை !
மனதில் உள்ள காதலை
உன்னிடம் சொல்ல ஆசை !
என் கண்பார்வையால்
நீ அறிந்து கொண்டாய் காதலனே !

எழுதியவர் : Poomani (8-May-20, 6:49 pm)
சேர்த்தது : பூமணி
Tanglish : aasai
பார்வை : 1654

மேலே