உலகம் கண்ட உழவின் பெருமை

ஊருக்கே சோறு போட்ட.

வள்ளல் அவன் விவசாயி.
தான் கண்ட துன்பமதை-தன்
தலைமுறைக்கு தந்திடவே.
விரும்பாத வேளையிலே.
விவசாயம் மறைந்ததிங்கே.
வளர்ச்சி எனும் மாயையிலே.
வாழ்வும் அது சிதைந்ததிங்கே.

இறக்குமதி செய்த சோறு.
இறங்கவில்லை வயிற்றினிலே-மீண்டும்
இறங்கி இவன் உழுதிட்டான்.
இனியும் உள்ள வயலினிலே.
உழவுத்தொழில் நாம் செய்து.
உலகின் பசி ஆற்றிடுவோம்.
ஏர் போற்ற இவ்வுலகம்.
எடுத்து அடி வைத்திடுவோம்.

எழுதியவர் : கோ.மணிவண்ணன் (17-May-20, 2:34 am)
சேர்த்தது : இசைப்ரியன்
பார்வை : 432

மேலே