கிளிப்பாட்டு
கிளிப்பாட்டு
அடுத்த வீட்டு மூங்கில் கிடங்கில்
அடுக்காய் நிறுத்திய மூங்கில் கட்டு
எடுத்துச் செல்ல என்றோ வருவார்
ஏணி செய்வார் என்றோ ஒருநாள்
வேலியிலா மூங்கில் கிடங்கும் திறந்த
வெளியில் போட்டுக் கிடக்கு உள்ளே
உயர்ந்து வளர்ந்த வேப்பன் ஒன்று
நூறு வருடமர மாம்பாரு கிளைபல
ஓங்கிநீள பசுமை எங்கும்
நாடிவரும் பறவைக் கூட்டம் பறக்குமுள்ளே
ஒற்றைமரப் பொந்தில் கிளிகள் கூட்டம்
விடிந்ததும் வெளியில் அழகாய்க் கொஞ்சும்
விண்னொலிக்கும் வண்ணக் கொத்திக் குரலுடன்
குக்கூ வென்றக் குயிலின் பாட்டும்
கிரீச்சிடும் பலவின் பறவைக் குரலைக்
கேட்ட தில்லை ஒருநாள் என்றும்
கேட்டை மூடியடைத் தபின்னே நானும்
கேட்கிறேனே தினமும் இன்று
கொரானா வால்நானும் இயற்கையை ரசித்தேனே

