அழகுகள் காத்திருந்தும் இரசிக்க முடியவில்லை

அழகான அழகுகள்
உங்களுக்காக
காத்திருக்கின்றன

அவைகளின்
அழகை
இரசிக்க அரசே
தடுக்கிறது

மஞ்சள் நிற
அழகுகள் சூரியனாய்
மலர்ந்து நிற்கிறாள்

சிவப்பு நிற
அழகு புன்னகையுடன்
அழைக்கிறாள்

பல வண்ண
அழகுகள் கண்ணை
பறித்து மயக்குகிறார்கள்

சுற்றி சுற்றி
அழகுகள் இருந்தும்


பார்வைக்கு
தடை போட்டு

திரையில்
பார்க்க
சொல்லிவிட்டது
ஊட்டி மலர் கண் காடசி
நிர்வாகம்

கொரோனா வைரசாம்

எழுதியவர் : தாமோதரன். (17-May-20, 12:55 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 113

மேலே