காலத்தின் சிற்பிகள்

ஆசிரியர்களின் சிறப்பியல்கள் சொல்ல ஓரு ஜென்மம் போதாத போதிலும் :
என் கவிதையின் மூலம் பல வரிகள் சொல்ல விரும்புகிறேன் :
மாணவர்களுக்குள்ள திறமை
இன்னதென்பதை அறியும் சிற்பிகள்!
இரவில் நிலவை பார்த்தால் நிலவுக்கு செல்ல ஆசைப்படுகிறோம் :
வலியில் துடிப்பவர்களை பார்த்தால்
மருத்துவர்களாக
ஆசைப்படுகிறோம் :
நடுக்கடலில் மிதக்கும் கப்பலை பார்த்தால் மாலுமிகளாக ஆசைப்படுகிறோம் :
உண்ணும் உணவை பார்த்தால்
உடல் வியர்க்க உழைக்கும்
விவசாயிகளாக ஆசைப்படுகிறோம் :
விதையாக இருந்த நம்மை மரமாக்கி
மற்றவருக்கு நிழலாக மாற்றி !
முடிகிடந்த நம் மனதை
லட்சியம் எனும் சுடர்ஒளியை ஏற்றி !
நம் விதியை உடைத்து :
நம்மை அறிஞராக, கவிஞராக, மருத்துவராக, காவலராக !
தன் தாய்நாட்டை பாதுகாக்கும்
ராணுவ வீரனாக !
நம்மை உருவாக்கும் நல்வழிகாட்டிகள் !
காலத்தின் மருவுருவம் நம் ஆசிரியர்கள் !
ஆசிரியர்களை மதித்து !
மனத்திரையில் பதித்து !
துயரத்தில் இருக்கும் போது தன்னம்பிக்கையின் வடிவமான
ஆசிரியர்களை நினைத்து !
ஆண்டுகள் பல கடந்தாலும் !
அழியா புகழை நம் அடைந்தாலும் !
ஆசிரியர்களின் நினைவு
நீங்கமற இடம் பிடிக்கும் என்றும்
நம் மனதில் !

எழுதியவர் : Poomani (17-May-20, 5:43 pm)
சேர்த்தது : பூமணி
பார்வை : 7218

மேலே