இருக்கு ஆனா இல்ல
இருக்குது ஆனா இல்ல
-----------------------------------------------
ஒரு அழகான உர்ல இருக்குற சுமாரான ஹோட்டல் ல சுறுசுறுப்பா வியாபாரம் நடந்துட்டு இருக்குற காலையில நம்மாளு உள்ள புகுந்து பன்ற ரகளைய பாருங்க....
"அண்ணா ஒரு பொங்கல் , ஒரு மெதுவடை ண்ணா"
"மெதுவடை இல்ல தீந்துடுச்சு"
"சரி ஒரு பொங்கல் மட்டும் ண்ணா"
"சாப்புடவா?"
"ஆங்! இல்ல சாணித் தட்ட"
"யோவ் சாப்புடவா இல்ல பார்சலா னு கேட்டேன்யா"
"பார்ரசல் ண்ணா பார்சல் ண்ணா"
"ஒரு பொங்கல் பார்சல்"
(( 10 நிமிடங்களுக்கு அப்புறம் ))
"பொங்கல் பார்சல் எடுத்து குடுத்துடு. அந்தாளு வடை கேட்டாருல்ல? வடை இருந்துச்சு. பார்சல் ல சேத்து கட்டியிருக்குறேன். சொல்லி குடுத்துடு"
"யாரது பொங்கல் பார்சல்?. இந்தாங்க. வடை இருக்குது சரீங்களா.."
"வடை இருக்குதா? அப்ப குடுங்கண்ணா"
"ஹாஹா வடை இருக்குதுங்க எடுத்துட்டு போங்க"
"அட இருக்குதுன்னா குடுங்கண்ணா"
"அட அது இல்லீங்க. வடை இல்லன்னதும், நீங்க வடை வேணான்னு சொன்னீங்கள் ல? அதான் வடை இருக்குது கொண்டு போங்கனு சொன்னேன்"
"இப்ப வடை வைக்கலியா, வைக்கலேன்னா விடுங்க ஒன்னும் பிரிச்சனை இல்ல. எனக்கு வடை வேணாம் போதுமா?"
"என்னங்க நீங்க? மொதல்ல வடை வேணுன்னு கேட்டீங்கள் ல? வடை இருக்குது எடுத்துட்டு போங்க"
" இத பாருண்ணா வடை இருக்குதுனா குடு. தேவையில்லாம நேரத்த வேஸ்ட் பன்னாத. ஏற்கனவே கொலை பசில இருக்குறேன். புடிச்சு கடிச்சு வச்சுடுவேன்"
"யோவ் நீ வடை கேட்டேல்ல? வடை இருக்குது. போயி பில்ல கட்டிட்டு பார்சல் அ வாங்கிட்டு போயி திண்ணு. என்ன ஆள விடு"
"அடீங்க! சும்மா வடை இருக்குது வடை இருக்குதுனு என்ன கலாய்க்குறியா? என்ன பாத்தா நெக்கலா தெரிதா என்ன? மூஞ்சி மொகரை லாம் பேந்துடும் ஜாக்கிரத"
இவங்க வியாபார நேரத்துல ஒருத்தர்க்கு ஒருத்தர் மொறைச்சுட்டு நிக்குறத கவனிச்சுட்டும் இவங்க பேசுறத எல்லாம் மொதல்ல இருந்தே கவனிச்சுட்டும் இருந்த ஒருத்தர், நடுவுல புகுந்து சமாதான படுத்தி வைக்குறாரு"
"சார் சார் கொஞ்சம் பொறுங்க, நான் தெளிவா சொல்றேன் கொஞ்சம் கவனிங்க.
நீங்க வடை கேட்டீங்கல்ல? நீங்க கேட்ட மெதுவடை ஒங்க கையில இருக்குற பார்சல் ல இருக்குது. எடுத்துட்டு போங்க. இப்ப புரிஞ்சுதா?"
"ஓ ஓ ஓ இவரு சொன்ன இருக்குது ன்றது அந்த இருக்குதுனு அர்த்தமா?
சாரி ண்ணா புரிஞ்சுக்காம ஏதேதோ ஒளறிட்டேன் சாரி சாரி"
"பரவால்லங்க பரவால்ல. எனக்கும்தான் ஒங்களுக்கு புரியுற மாதிரி சொல்ல தெரியலேல்ல. சாரி! நீங்க சீக்கிரமா போயி சாப்புடுங்க. பாவம் பசியோட இருப்பீங்க. போயிட்டு வாங்க. அடிக்கடி நம்ம கடைக்கு வாங்க"
"சரி வர்றே ண்ணா"
(( *FINALLY* ))
பில்லு கட்டுற அந்த இடத்துல
"ஒரு பொங்கல் ஒரு வடை எவ்வளவு?"
"₹35 குடுங்க சார்"
நம்மாளு ₹100 நோட்டு + ₹5 நோட்டு சேத்து பில்லோட சேத்து மடிச்சு நீட்டுறாரு
₹100 அ மட்டும் பாத்துட்ட கல்லால இருக்குற மனுசன் கேக்குறாரு
"சில்லறை ₹5 இருக்குதா?"
"₹5 இருக்குது சார் "
" சார் இருக்குதுனா குடுங்க சார்"
"ஐயோ சார் ₹5 இருக்குது சார்"
😄😄😄