கில்லாடி

அவர் வேகமாக கார் ஓட்டிக்கொண்டு இருந்தார்.
ஒரு போலீஸ்காரர் காரை மடக்கி நிறுத்தினார்
எதுக்கு நிறுத்தினீங்க?
ஓவர் ஸ்பீடிங். நீங்க பயங்கர வேகத்துலே போயிட்டு இருந்தீங்க.
நானா?
நீங்களேதான்.
உங்க கார் லைசென்ஸைப் பாக்கலாமா?
லைசென்ஸா?
இருந்தா கொடுப்பேன்.
ஓ! லைசென்ஸ் இல்லியா?
இது வரையிலும் நாலு தடவை நான் குடிச்சிட்டு ஓட்டினதுலே ஒரு தரம் அதை மிஸ் பண்ணிட்டேன்.
காருக்கான ரெஜிஸ்டிரேஷன் பேப்பர்களைப்பார்க்கலாமா?
என்னால் காட்ட முடியாது
காட்ட முடியாதா? ஏன்?
நான் இந்தக்காரைத்திருடிகிட்டு வந்தேன்.
என்ன காரைத திருடினீங்களா?
கார் ஓனரைக் கொன்னு திருடினேன்.
என்ன கார் ஓனரைக் கொன்னுட்டீங்களா?
கொன்னு பார்ட் பார்ட்டா வெட்டி அதை பிளாஸ்டிக் பையிலே போட்டு காரோட டிக்கியிலே வெச்சிருக்கேன். பார்க்கறீங்களா?
போலீஸ்கார ர் திகைத்துப்போய் ‘கொஞ்சம் இருங்க’ என்று அப்பால் போனார். ஒரு ஐந்து நிமிடத்திற்குள் அங்கு நான்கு போலீஸ்கார்கள் வந்து சேர்ந்தன். அதில் ஒன்றிலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் இறங்கினார்.
மேடம், கொஞ்சம் காரிலிருந்து கீழே இறங்கி வரீங்களா?
என்ன ஏதாவது பிரச்சினையா?
நீங்கள் ஒரு ஆளைக்கொன்னு அவர் காரைத் திருடியதாக கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு
என்ன நானா?
ஆமாம்.
பொணத்தைக்கூட மூட்டை கட்டி டிக்கியிலே போட்டு இருக்கீங்களாமே.
இந்தாங்க டிக்கி சாவி. நீங்களே திறந்து பாத்துக்குங்க.
அவர் டிக்கியைத்திறக்கிறார். டிக்கி காலியாக இருக்கிறது.
ரெஜிஸ்டிரேஷன் பேப்பர் இல்லையாமே?
அவர் தன் கைப்பையைத்திறந்து ரெஜிஸ்ட்ரேஷன் பேப்பரை எடுத்துக்கொடுக்கிறார்.
லைசென்ஸ்?
அதை இன்னொரு கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறார்.
என்ன? எல்லாம் சரியாத்தானே இருக்கு
அப்புறம் நான் ஓவர்ஸ்பீடுலே டிரைவ் பண்ணினதாகக் கூட கம்ப்ளெ யிண்ட் வந்திருக்குமே
இன்ஸ்பெக்டர் போலீஸை முறைத்துப் பார்த்து விட்டு,
இனிமேல் இந்த மாதிரி நடந்து கிட்டா, உங்களை டிஸ்மிஸ் பண்ண வேண்டி வரும் என்றார்.

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (17-May-20, 11:54 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
Tanglish : killaadi
பார்வை : 84

மேலே