குரங்குசாமி

நான் புதுசா இந்தப் பள்ளிக்கு வந்த ஆசிரியர். என் பெயர் எழிலரசன். மாணவர்களே வருகைப் பதிவேட்டில் உள்ள உங்கள் பெயர்களை உச்சரிப்பேன். நீங்கள் "உள்ளேன் அய்யா"னு சொல்லணும்.
@@@@@@@
சரிங்க அய்யா.
(ஆசிரியர் மாணவர்களின் பெயரைப் படிக்கிறார். ஒவ்வொருவரும் "உள்ளேன் அய்யா" என்று கூறுகின்றனர்.)
@@@@@@
அடுத்து "குரங்குசாமி". என்னடா பேரு இது. யாருடா இந்தப் பேரை உனக்கு இந்தப் பேரை வச்சது?
@@@@@@@@@
அய்யா, என் அப்பா பேரு குமாரசாமி. நான் பொறந்த மூணாவது நாள்ல நகராட்சியில எம் பேர பதிவுசெய்ய போன எங்க மாமா விண்ணப்பப் படிவத்தில் எம் பேரை "கு. ரங்கசாமி. த/பெ. குமாரசாமி" னு எழுதிக் கொடுத்திருக்கிறார் அதைப் பதிவு செய்தவர் ஒரு கடைநிலை ஊழியராம். அவர் எம் பேரை "குரங்குசாமி"ன்னு பதிவு பண்ணி பிறப்புச் சான்றிதழைக் குடுத்துட்டாராம்.
@@@@@@
சரி வழக்குப் போட்டு அதை மாத்தியிருக்கலாமே.
@@@@@@@
எங்க அப்பா வங்கில வேலையில இருக்கிறார். அடுத்த வாரம் பதிவு உயர்வில வடமாநிலமான பீகாருக்குப் போறாரு குடும்பத்தோட. வடக்க பெண் கொழந்தைகளுக்கு 'குரங்கி" (Kurangi = deer)ன்னெல்லாம் பேரு வைக்கிறாங்கலாம். நானும் வடக்க போனா எம் பேரைக் கேட்டா இந்திக்காரங்கெல்லாம் சந்தோசப்படுவாங்க. 'குரங்குசாமி"யை "ஸ்வீட் நாம் பியார்"ன்னு பாராட்டுவாங்க அய்யா. நாங்க வடக்கயே நிரந்தரமா தங்கப் போறாம்.
@@@@@@@@
நல்ல முடிவுடா குரங்குசாமி.
@@@@@@
ரொம்ப நன்றீங்க அய்யா.

எழுதியவர் : மலர் (17-May-20, 8:47 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 76

மேலே