ஒரு மாணவி
ஜில் என்று காற்று
சொல் என்றது
அவள் மனம்
நில் என்றது
ஏன் இந்த மாற்றம்
அவன் அழைக்கவில்லை
அவள் நினைவில் அவன்
காதல் துளிர்த்து விட்டால்
தேடலில் மனம்
தன்னை நினைத்து
தானே சிரித்துக் கொண்டாள் .
இரும்பு அல்ல இதயம்
இனிமை, இளமை , மென்மை
பூத்துக் குலுங்கும் ,அதன் தோற்றம்
இதனால் தான்
காதல் வசமாய் ஒட்டிக் கொள்கிறது
இந்த நினைப்பில் வேகவேகமாய்
நடந்ததில் கல்லூரி வாசல்....
பின் தன்னை சுதாரித்து
மாணவி என்ற பெருமிதத்துடன்
கல்லூரியில் அவள்......