நிமிர்ந்து நில்
==============
வாழுகிற வாழ்வினிலே வந்ததெல்லாம் துன்பமென்று
வாடிநின்றால் தீர்வதுண்டோ துன்பம் துன்பம்
சூழுகின்ற சோதனைக்கு சூடுவைக்க எண்ணிவிட்டால்
சொந்தமாகும் உன்னிடத்தில் இன்பம் இன்பம்
**
தேடுகின்ற தெல்லாமும் தேய்ந்தழியக் காண்பதனால்
தேம்பியழத் தீர்ந்திடுமோ கூறு கூறு
நாடுகின்ற தத்தனையும நம்மோடு நிற்பதில்லை
நம்பிக்கைத் தளராதே தேறு தேறு
**
உள்ளவற்றைக் கொண்டென்றும் உயர்வுக்காய் பாடுபட்ட
உள்ளங்கள் வீழ்ந்ததுண்டோ தம்பி தம்பி
கள்ளமின்றிக் கபடமின்றிக் கற்றதற்கு ஏற்றபடி
கச்சிதமாய் வாழ்ந்துவிடு நம்பி நம்பி
**
நிலையில்லா வாழ்வினிலே நிலைக்காதப் பொருளுக்காய்
நிம்மதியை இழப்பதென்ன சொல்லு சொல்லு
அலைபோல திரண்டுவரும் ஆசைகளை விட்டொதுக்கி
அமைதியுடன் தலைநிமிர்ந்து நில்லு நில்லு
**
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
