296 சினமுளோன் இறந்தால் சேர்ந்தாரும் மகிழ்வர் – சினம் 5

கலித்துறை
{மா விளம் விளம் விளம் மா)

சினமு ளோன்மனை மைந்தர்க(ள்) அவன்வெளிச் செல்லுந்
தினமெ லாந்திரு விழவுகொண் டாடுவர் செல்லா(து)
இனையன் தங்குநா(ள்) இழவுகொண் டாடுவ ரிறப்பின்
மனையி லோர்பெரு மணவிழா வந்தென மகிழ்வார். 5

– சினம்
- வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கோபம் கொள்பவனின் மனைவியும் பிள்ளைகளும் அவன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நாட்களை எல்லாம் திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். இப்படிப்பட்டவன் வெளியில் செல்லாது வீட்டில் தங்கும் நாளை இழவு நாளாகக் கொண்டாடுவர். அவன் இறந்தால் அன்று வீட்டில் திருமண விழா வந்தது போல் பெரிதும் கொண்டாடி மகிழ்வர்” என்று இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.

இனையன் – இப்படிப்பட்டவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-20, 8:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே