பெண்ணில் சக்தி
அழகிய பெண்ணைப் பார்க்கிறாய்
அழகில் மதிமயங்கி எண்ணங்களை
கவிதை யாக்குகிறாய் கொஞ்சம்
அகக்கண்ணையும் திறந்து பார்
அதில் காட்சி தருவாள்
அவள் உன்னையும் என்னையும்
படைக்கும் சக்தியின் வடிவாய்
இதைத்தான் கண்டான் பாரதி
காணும் ஒவ்வோர் பெண்ணிலும்
படைத்தான் சக்தியின் துதிகள்
முத்து முத்தானவை இவை
பக்தி இல்லார் மனத்திலும்
பக்தி சுரக்க வைக்கும்