அகந்தையை அடக்குவோம்

மஹாபாரதத்தில் துரியோதனன் ..........
அசூயை அகந்தை ஆகியவற்றின்
மொத்த உருவானவன் ஒழுக்கமற்றவன்
இவற்றால் கண்முன்னே காட்சி தந்த
கண்ணபெருமானைக் கூட காண தவறியவன்
கண்ணிலா குருடன் அவன் தந்தை
துருத்திராஷ்டிரன்
இவனோ அகந்தை திரை மறைக்க
கண்ணிருந்தும் குருடானவன்
அகந்தையால் தானும் மாய
தன்னுடன் தன் தம்பிமார்கள்
ஆப்த தோழன் கர்ணன், குருக்கள்
துரோணர் . பிதாமகர் பீஷ்மர் என்றிவர்களை
தன்னோடு சேர்த்து மாய்த்தான் பாவி
நம்முள் ஒவ்வொருவர் இடமும்
அகந்தை உள்ளது .... அதை
அடக்கி நல்லொழுக்கம் பேண
நம்முள் வந்த துரியோதனன்
போவான் காணாது ......
இதுவே மகாபாரதத்தின் சாராம்சம்
; கண்ணன் காட்டும் வழி... பகவத் கீதை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jun-20, 8:20 pm)
பார்வை : 78

மேலே