வாழும் வரை போராடு
கடந்து வந்த பாதை எங்கும்
முட்கள் மட்டுமல்ல பல
மூடரும் நிறைந்தது..
ஏளனமாய் பார்ப்பவரை கண்டால்...
இளப்பமாய் நகைப்பவரை கண்டால்..
கடுமையாய் விமர்சனம் வந்தால்...
கண்களிலே பழி உணர்வு வந்தால்..
கவலை வேண்டாம்... கண்டுகொள்ள வேண்டாம்.
துயரங்களை தள்ளி வைப்போம்...
அவர்களில்...
தூரமாய் தள்ளி நிற்போம்.
ஒருமுறைதான் பிறக்கிறோம்..
ஒருமுறை இறந்தும் போவோம்..
வாழும் வரை போராடு
வானம் என்றும் உன்னோடு.
...