சமாதானம் நிலவட்டும்

ஞாயிறு தூக்கம் பெரும்பாலும் இப்படித்தான் கலைந்துபோகும்.

"எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள்,அனைவரிடமும் சமாதானம் நிலவுவதாக".

திடுக்கிட்டு எழுந்து
வழக்கமான வசைகளைக் கேட்டு
கூடைப்பையில் தூங்கும் நூறுடன்
வரிசையில் நிற்பேன்,

அழித்து அழித்து அந்தோணி எழுதுவார்
கறிக்கோழி
உசிறுடன் 120
உரித்தாது 180

"நேத்து நூறுதானே" என சண்டை தொடங்கும்,

எடைக்கு மேல் விழும்
ஈரல்,இதயத்துடன் சமாதானம் ஆகிவிடும்!

எழுதியவர் : ஜெகன்.த (15-Jun-20, 5:20 am)
சேர்த்தது : Jegan
பார்வை : 83

மேலே