முடிவிலா கவிதை நீ❤️

பிரிக்க முடியாதொரு...
பிரபஞ்சத்தின் எல்லைக்கோட்டில்
இருந்தும் கிடந்தும் பின் மறந்தும்
வார்த்தைகள் தேடித் திரிந்தும்..
பிரித்தும் சேர்த்தும் பின்...
சேர்த்ததை கோர்த்தும்..
தட்டித்தட்டி வார்த்தும் பின்...
வார்த்தையில் வடித்தும்..
முடிவிலா கவிதை ஒன்றை அழகாய்
முடித்து வைக்க என்
அத்தனை பிரயத்தனங்களும்...
அர்த்தமற்று போகின்றன..!!!
ஆதி அந்தமில்லா
அழகுக் கவிதை உன்னிடம்
என் மகளே...!!!