ஆன்மீக மின்னல்கள்
கவிதை
ஆன்மீக மின்னல்கள் கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
உலகில்
தவறும் பொருளை
தவறாமல் உரியவரிடம்
தரும்போது நன்றி
தவறாமல் கூறுகிறோம் !
நமக்காக
பலகோடி உயிர்களை
உலகில் படைத்து
நம்மை மகிழ்விக்கும்
கடவுளுக்கு நன்றி
கூற வேண்டாமா?
உலகில்
உண்மையாக வாழ்ந்தால்
துன்பம் துயரம் வரும்
துவண்டு விடாதே
துடித்து விடாதே !
சில நேரங்களில்
சில மனிதர்களிடம்
பேசாமல் மெளனமாக
இருந்து பாருங்கள்
அமைதி கிடைத்து விடும் !
பேச்சின் ஆற்றல் தீப்பொறி
புரிந்து கொண்டு
பேச்சைக் குறைத்து
நல்லெண்ணம் வளர்த்தால்
நாம் வாழும் உலகமே
நம் வசப்படும்!
உலகில்
எவ்வுயிரும் தன்னுயிர்போல்
நினைத்து வாழ்ந்தால்
நிம்மதிக் காற்று
உன்னை நோக்கி வீசும்!
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை