முதுமையின் சிறை

கருவறை கூட இருட்டென்று...
உன்னை கூட்டி வந்தோம்...
இவ்வுலகிற்கு!
உன் கரம் பிடித்து
கூட்டிச் செல்லவேண்டும்!
என்ற ஆசையில்...
மகனே,
அன்று அறியவில்லையடா?
அனைத்தும் பொய்யாகும் என்று!
எங்களை சுமையெனக்கருதி
இன்று நீ
கரம்பிடித்து முதியோர் இல்லத்தில்
விட்டுச் செல்கையில்...
ஆனால்,
அன்று உனை வளர்ப்பது
சுமையெனகருதி
குழந்தை காப்பகத்தில்
நாங்கள் விட்டுவிடவில்லையே?
பின்னர்...
ஏன் எங்களுக்கு இந்த சிறைவாசம்?
உனக்காக ஓடிய கால்கள்
தேய்ந்துவிட்டதாலா?
இல்லையேல்,
உனக்காக பாடுபட்ட கைகள்தான்
முடங்கிவிட்டதாலா?
கூட்டிலிருந்து விடைகொடுத்து
கூண்டில் அடைத்துவிட்டாயே...!
இவ்வாறு...!
மகனே,
குற்றம் அறியாமல்
தண்டனையிங்கு...
குற்றமே எங்களது முதுமைதான்
என்று கூட புரியாத நிலையில்...
இன்றும்,
அனுபவித்து வருகிறோம்...
அந்த முதுமையின் சிறைவாசத்தை!

எழுதியவர் : தியா (16-Jun-20, 7:44 pm)
சேர்த்தது : DHIYA
Tanglish : muthumaiyin sirai
பார்வை : 360

மேலே