அப்பா

அப்பா...
என்
தனி நிழலை
ரசித்த முதல் நிஜம்...

எதிர்கால வாழ்வின்
முதல் ஊன்றுகோல்...

அடியால் அன்பு பொழிந்த
முதல் ஆசான்...

என் எதிர்கால கனவின்
முதல் சேமிப்பு...

தன் செலவால்
என்னை வரவுவைத்த
முதல் பணக்காரர்...

என் வாழ்வின்
மகிழ்ச்சியை நடத்திக்காட்டிய
முதல் வித்தைக்காரர்...

என் முதல்
தெளிவில்லா வினாவின்
தெளிந்த விடை...

என்
சாத்தியமான எதிர்காலத்தை
சுட்டிக்காட்டிய முதல் தொலைநோக்கி...

என்னை முறைத்தே
வெற்றியை கற்றுத்தந்த
என் முதல் முதலாளி...

நான் சிரகுவிரிக்க
அவர் உழைபைத்தந்த
முதல் கடனாளி...

அவர் தீறாக்கடனை
என் குழந்தை இடம்
தீர்க்கிறேன்
வட்டியுடன் சேர்த்தே
என் குழந்தையின் சேமிப்பாய்...

எழுதியவர் : Praveen Kumar (21-Jun-20, 10:35 pm)
சேர்த்தது : PraveenKumar R
Tanglish : appa
பார்வை : 71

மேலே