சூதுன்னா பேரு வைக்கிறது - குறுங்கதை
'சூது'ன்னா பேரு வைக்கிறது?
@@@@@@@
ஏன்டப்பா ஏழுமலை உம் பையன் பேரு என்னடா?
@@@@@
,மொத நீங்க என்னை ஏழுமலைன்னு கூப்படறதை நிறுத்துங்க பாட்டி. அதே அர்த்தத்தோட எம் பேரு இப்ப 'ஸப்தகிரி'. ஞாபகம் வச்சுக்குங்க.
@@@|@@
சரிடீப்பா சப்பத்தகிரி. உம் பையன் பேரு என்னடா?
@@@@@@
ஒரு இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சி பாத்தேன். அதில பேசின ஒருத்தர் பேரு 'சோனு சூத்' (Sonu Sood). சோனு அர்த்தமில்லாத செல்லப் பேரு. 'சூத்'ங்கிற பேரு எனக்கு பிடிச்சிருந்தது. அதையே எம் பையனுக்கு வச்சுட்டோம்.
@@@@@@
ஏன்டா பேரா சப்பத்தகிரி பெத்த பிள்ளைக்கு 'சூது'ன்னா பேரு வைக்கிறது. என்ன அநியாயம்டா இது?
@@@@@@
அநியாயமும் இல்லை. அக்கிரமும் இல்லங்க பாட்டி. அந்தப் பேரு சாமி பேரு. கிருஷ்ண பகவானுக்கு பல பேருங்க உண்டு. அதில ஒரு பேருதான் 'சூத்'(Sood = slayer of the demon Madhu; Lord Krishna).
@@@@@
ஓ.. அப்பிடியா. சாமி பேரை பிள்ளைங்களுக்கு வைக்கிறது நல்லதுதான். ஆனா இந்தப் பேரைச் சொல்லி எங் கொள்ளுப் பேரனை கூப்படறதுக்கும் கொஞ்சறதுக்கும் நல்லா இருக்காதே.
######@
உங்களுக்கு பிடிக்கிலன்னா வேற எதாவது பேரை வச்சு உங்க கொள்ளுப் பேரனைக் கொஞ்சுங்க, கூப்புடுங்க, பழகுங்க.
@@@@@
சரிடப்பா சப்பத்தகிரி.