அவளும் நானே
அவளும் நானே
அம்மா, சொல்லுங்க என்று ஆரம்பித்தாள் என் அக்கா மேனகா. காலேஜ் ஸ்டுடென்ட்.
"நீங்க அண்ணி க்கு ரொம்ப இடம் கொடுக்கறீங்க. அவர்கள் என்ன சொன்னாலும் சரின்னு சொல்றீங்க. ஏன்? " என்ற அவளின் கேள்விக்கு,
அம்மா, பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார். நான் கடைக் குட்டி பிரகாஷ். ரெண்டு பேரும் என்ன பேசுறாங்கன்னு புரியாமல் கேட்டுகிட்டு இருந்தேன்.
நான் என்ன சொல்லணும்னு நீ விரும்பற ? அம்மா கோபமாக கேட்டதும் மேனகா அக்கா, மௌனமானாள்.
"எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க?" மேனகாவிடம் கேட்டேன்.
அண்ணி , என்னை ஈவினிங் பர்த்டே பார்ட்டிக்கு போக வேண்டாம் னு சொல்லிட்டாங்க. அம்மாவும் சரின்னு சொல்றாங்க. அண்ணி மட்டும் எல்லா இடத்துக்கும் போகலாம்.நான் போக கூடாதா என்ற கேள்வியுடன்