கட்சி வளர்ச்சி

தம்பி இங்க வாடா.
@@@@@@
என்னங்க அண்ணே?
@@@@@@
நம்ம கட்சியை ஆரம்பிச்சு பத்து வருசம் ஆகுது. இன்னும் பேரு சொல்லற அளவுக்கு வளர்ச்சி அடையலயே! என்னடா செய்யலாம்.
@@@@@@@
அண்ணே "கலகம் செய்தால் காரியம் கைகூடும்"னு நம்ம கட்சியின் ஆஸ்தான சோதிடர் சோதிட மாமணி இஷ்டலிங்கமே சொல்லிட்டாரு
@@@@@
கலகம் செய்யுனும்டா?
@@@@@@@@
பொய்த் தகவல்கள் பரப்புகிற, வதிந்திகளை பரப்பி பணம் சம்பாதிக்கிற சிறப்பு நிபுணர்களை விலைக்கு வாங்கணும். அவுங்க சமூக வலைத்தளங்கள்ல்யும் புலனத்திலும் (whatsapp) பிரபல கட்சிகளப் பத்தியும் அங்கே பதவி உயர்வு கிடைக்கமா இருக்கிறவங்களப் பத்தியும் பச்சைப் பொய்களைத் திரும்பப் திரும்ப பதிவிட்டுட்டே இருக்கணும். சம்பந்தப்பட்ட கட்சிகள்ல குழப்பம் வரும். அந்தக் கட்சிகள்ல பிரபலமா இருக்கிறவங்க போர்க் கொடியைத் தூக்கி தங்கள் கட்சிகளுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவாங்க. அந்த நபர்களை கட்சியிலிருந்து நீக்குவாங்க. இதுக்கு பேர்தான் கலகம் செய்யறது.
@@@@@@@
தம்பி நான் பத்தாம் வகுப்பே தேறாதவன். நீ கல்லூரிப் படிப்பை முடிக்காம நின்னவன். என்னைவிட நீ புத்திசாலிங்கிறதை நிரூபிச்சிட்டீடா தம்பி. சரி சொல்லு.
@@@@@###
வேற கட்சிகள்ல இருந்து நீக்கப்பட்ட தபர்களின் அரசியல், சமுதாயத்தில் அவுங்களுக்கு உள்ள செல்வாக்குக்குத் தகுந்த மாதிரி எலும்புத் துண்டுகள (பணம்) வீசிப்போடணும். நம்மகிட்ட கொட்டிக்கிற தகாத வழிகள்ல சம்பாதிச்ச பணம் எவ்வளவுன்னு நமக்கே தெரியாது. சில கோடிகளை அள்ளி வீசினா பெரிய பெரிய தலையெல்லாம் நம்ம வலைல விழுந்திடும். அவங்க நம்ம கட்சிக்கு வந்தா அவுங்க ஒவ்வொருத்தர்கூட ஆயிரம் பேர் நம்ம கட்சில இணைவாங்க. இணைப்பு விழா தனித்தனியா நடத்தி பிரியாணி விருந்து வச்சு நம்ம கட்சித் துண்டுகளைப் ஒவ்வொருத்தருக்கும் போத்தி விடணும்.
@@@@@@@
தம்பி இப்பெல்லாம் மக்கள் பிரதிநிதிகளையே ஆடுமாடுகளைப் போல விலைபேசி வாங்கற காலமா இருக்குதடா. எத்தனை கோடி செலவானாலும் பரவால்ல. நம்ம கட்சி அடுத்த தேர்தல்ல ஆட்சியைப் பிடிக்கணும். நான் முதல்வர் நாற்காலில உக்காருணும்.
@@@@@@@@
சத்தியமா அது நடக்கும் அண்ணே. கவலை வேண்டாம். ஒடம்ப பத்தரமா பாத்துக்குங்க.
#@@#####
சரிடா தம்பி.

எழுதியவர் : மலர் (22-Jun-20, 12:13 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : katchi valarchi
பார்வை : 140

மேலே