நகைச்சுவை துணுக்குகள் ௧௩
அவர் பெண்டாட்டிதான் அவரை அவ்வளவு நல்லா கவனிச்சிக்கிறாங்க. அருமையா சமையல் பண்ணிப் போடறாங்க. வீட்டு வேலைகளையெல்லாம் பொறுப்பா தலைமேலே போட்டுக்கிட்டு நல்லபடியா செஞ்சி முடிக்கிறாங்க. அப்படி இருக்கும்போது அவர் ஏன் எல்லார் எதிரிலேயும் அவங்களைத் திட்டிப் பேசிக்கிட்டே இருக்கார்.
அதுவா? அப்பத்தான் அவரை நாலு பேர் ஆம்பிளைன்னு மதிப்பாங்களாம். இல்லேன்னா அவரை (henpecked husband) பொண்டாட்டி தாசன்னு சொல்லிடுவாங்களாம்
***************
நீங்க நோட்டு நோட்டா எல்லாக் கட்சிக்காரங்க கிட்டேயும் பணம் வாங்கினீங்களே. கடைசியிலே நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?
நோட்டா (NoTA) வுக்குத்தான்.
**************
என்னைக்குமே கோர்ட்டுக்குப் போகாத அந்த வக்கீல் இன்னிக்கிக் கோர்ட்டுக்குப் போயிருக்கார், தெரியுமா?
நல்ல கேஸ் ஏதாவது கிடைச்சிருக்கும்.
அதெல்லாமில்லை. அவர்மேலே யாரோ கேஸ் போட்டுட்டாங்களாம்
*****************
ஏன் நம்ம கலக்டர் இவ்வளவு கோவமா இருக்கார்?
நம்ம ஹோட்டல் திறப்பு விழாவிற்கு 'மாவட்ட கலக்டர் வருகை' அப்படீன்னு போடறதுக்குப் பதிலா 'மாவாட்ட கலக்டர் வருகை'ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டிட்டாங்க. அதான் அவர் கோபத்திற்குக் காரணம்.
*************