உப்பளத்தில்
வெயிலால் வந்திடும் விளைச்சலிது
வேர்வைச் சுவைதான் உப்புயிது,
பயிர்போல் விளையும் வயலினிலே
படிகமாய் மாறிடும் கடல்நீரே,
வயிற்றுப் பிழைப்புப் பலர்க்கிதுவே
வயிற்றி லடித்திடும் மழைவந்தே,
கயிற்றில் நடப்பதாய் வாழ்க்கையிது
காணீ ராங்கே உப்பளத்திலே...!