வானவில்
அந்தி நெருங்கும் நேரம்
குண திசையில் கண்டேன்
அந்த மாபெரும் வானவில்லை
வானிலிருந்து வெங்கட் கடலைத்
தொடுவதுபோல் முழுநீள வானவில்
படகில் சென்று தொட்டுவிடலாமா
விண்ணிலிருந்து வந்து மண்ணைத்
தொட்டுக்க கொண்டிருக்கும் வானவில்லை
வானம் தொடுவானம் ஆகுமோ
என்று எண்ணினேன் நானே
நானோ போய்க்கொண்டே இருந்தேன்
படகில் கடலைத் தொடும்
வானவில்லைத் தொட்டேன் இல்லேன்
புரிந்தது தொடுவானம் என்றுமே
தொடா வானம் தான்

