அவள் நினைவுகள்

அவள் நினைவுகள்

அவள் நீல நிற கண்கள்
வர்ணஜாலம் புரியுமே!
அவள் கனிவான பேச்சு
காதல் ரசம் பொழியுமே!
அவள் உதட்டோர சிரிப்பு
உள்ளம் ஊஞ்சல் கட்டி ஆடுமே!
அவள் ஆறுதல் பேச்சு
தன்னம்பிக்கை தூண்களை விதைக்குமே!

காதலை நான் உன்னிடம் சொல்லும் முன்னமே
காலதேவன் நம்மை பிரித்து விட்டான்.
பழகியது சில காலம் என்றாலும்
உன் நினைவுகள் பாடாய் படுத்துகிறது.
உன்னை போல் ஒரு பெண்
உறுதியாக நான் இதுவரை கண்டதில்லை
உலக அழகி வரிசையில்
இடம் பெறும் நீ,
ஆனவம் எள் அளவும் இல்லாமல் அமைதி பூங்காவாக காட்சியளிதாய்.
ரத்தின சுருக்கமான உன் பேச்சு ஹைக்கூ கவிதைகள்.
உன் அலட்டிக்கொள்ளாத அழகிய குரல்
இரவில் பண்பலையில் மிதந்து வரும் மெல்லிசை.
அலங்காரம் இல்லாத உன் அழகு
ஆடம்பரமில்லாத ஆண்டவன் சிலை.
பெண்னே உன்னை மீண்டும் எப்போது சந்திப்பேன்.
மனம் ஏங்குகிறது.
அந்த நாளை எதிர் நோக்கி ஆவலுடன் உள்ளேன்.
அது வரை உன் நினைவுகளில் நீராடுகிறேன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (27-Jun-20, 10:32 pm)
சேர்த்தது : balu
Tanglish : aval ninaivukal
பார்வை : 507

மேலே