10 அவளுடன் பேசும்போது

_________________

மொபைல் அழைத்தபோது நான் என் வீட்டு தோட்டத்தில் இருந்தேன். அழைப்பு வந்தது அவளிடமிருந்துதான்.

ஸ்பரி... இப்போது எண்ணற்ற மனங்களுடன் நான் வாழ்ந்து வரும் உணர்வை அடைந்தேன். என்னை யாரோ புறக்கணிக்கிறார்கள் என்று ஏதேதோ குழப்பமான எண்ணங்கள் வருகிறது.

அவள் பேசுவதை நிறுத்தினாள். நான் அப்போதும் எந்த பதிலும் அவளுக்கு அளிக்கவில்லை.

ஸ்பரி... நான் நிச்சயமாக ஏமாந்து விடுவேன் என்றும் எல்லோரும் என்னை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு சிந்தனை பரவுகிறது. என்னால் நிதானமாக இருக்க முடியவில்லை ஸ்பரி.

நீ இங்கு வரலாமே என்றேன்.

இல்லை. நீங்கள் போனில் பேசுங்கள்.

நான் இதில் சொல்ல என்ன இருக்கிறது?

உங்களால் இப்போது பார்க்க முடிந்ததை மட்டுமாவது சொல்லுங்கள் ஸ்பரி.

நீ ஒருவேளை விலகி நிற்க வேண்டிய இடத்தில் உரிமை கோரலாம். உன் தனிமைக்கு நீ உரிய அளவில் மதிப்பளிக்க மறுக்கிறாய் என்றும் நான் நினைக்கிறேன்.

ஆதாரம் என்ன ஸ்பரி?

உன்னோடு நீ மட்டும் இருப்பதை சதா நினைத்து கொண்டிருப்பதுதான்.

நான் அவ்வித தனிமையில் இல்லை ஸ்பரி. என் கூடவே இருக்கும் இந்த நாய் குட்டிகளுடன் நான் பேசி கொள்கிறேன்.

பேசுவதும் பாடுவதும் நிறுத்தி கொள்வது அல்ல தனிமை என்பது. நீ மௌனமாக இருத்தல் என்பதை வலுக்கட்டாயமாக நம்பும்போது அதையே தியானம் என்றும் நீ நம்பும் போதும் இறுதியில் உன்னை நீயே ஏமாற்றி கொள்வதாகவே முடியலாம். அப்போது உனக்கு இப்படி எண்ணற்ற மனங்கள் வந்து சேரும்.

நான் இதில் இப்படியே சிக்கி இருப்பதை விரும்பவில்லை ஸ்பரி.

இப்போது நீ அவைகளை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். உன்னை எது துளைக்க முனைகிறதோ அவற்றுக்கு இருப்பதெல்லாம் உன் நகங்கள் மட்டுமே.

ஸ்பரி நான் இப்போது அங்கு வரவா?.

காய்கனிகள் வாங்க வேண்டும். நானே வருகிறேன். பூங்காவுக்கு செல்வோம் என்று போனை அணைத்தேன்.


_____________________

எழுதியவர் : ஸ்பரிசன் (1-Jul-20, 11:20 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே