12 அவளுடன் பேசும்போது

__________________

காகிதங்களை அடுக்கி கொண்டே என்னை பார்த்தாள்.

"உன் பெயரில் நீ எங்கு இருக்கிறாய்" என்று மீண்டும் கேட்டேன்.

பெயரில்... நான் என்பது... அது என் பெயரில் நான்தான்.

உண்மை. உன் பெயர் உனக்கு உரியஒரு சுட்டல் மட்டுமே. அடையாளம். இனி அதில் ஊன்றி கவனிக்க வேறு ஒன்றும் இல்லை.

ஆம்.

அதுபோல்தான் தலைப்பும். படைப்புக்கு எழுதப்படும் முன்  பின் குறிப்புகளும். 

ஒரு படைப்பில் தலைப்பை தவிர்த்தால் அதை நம் முதலாளிக்கும் பொருத்த முடியும், ஒரு ஜமீன்தாருக்கும் பொருத்த முடியும். எவ்விதமான கோட்பாடுகள்  உள்ள அரசாங்கத்துக்கும் பொருத்தலாம்.

உண்மைதான்... ஆனால் ஏன் அப்படி சுற்றி வளைத்து குழப்ப வேண்டும்? ஸ்பரி.. இது நீங்கள் ஒரு எளிய படைப்பை சிந்தனையால் மிரட்டுவது போல் இது இல்லையா?

அவள் பேப்பர்களை சீராக்கி கொண்டு என்னை பார்த்தாள்.

"ஆனால் இதுவன்றி நீ படைப்பில் இடும் தலைப்பும் கருத்துக்களும் ஒரு மியூசியத்தில் உன்னை அடைப்பது போல் உணரவில்லையா?"

"ஒரு சினிமா பாடல் முழுக்க முழுக்க கதாபாத்திரத்துடன் மட்டுமே ஒன்றி இருந்தால் அதை நாம் ரசிக்கவோ திரும்ப திரும்ப பாடிக்கொள்ளவோ முடியும் என்று நம்புகிறாயா?"

எனில்... கருத்துக்கள் சொல்லவே கூடாது என்று கொள்ளவா? சும்மா கவிதை கட்டுரை என்று போட்டால் போதுமா?

அதுவும் கூட வேண்டாம். ஆனால் வரைமுறைப்படுத்தல் என்ற ஒரே தேவைக்கு நான் அப்படி போடுகிறேன். பார்க்க போனால் தொழில்நுட்ப தகவல் மட்டுமே அது.

ஒரு முன்னுரை என்பது படைப்பின் பின்னால் இருக்கும் வரலாற்றை, காட்சியை, அவஸ்தையை, அழகை, விளக்கினால் அது கூட மிக உபயோகம். தெரியுமா. முன்னெல்லாம் முன்னுரை வேண்டி எழுத்தாளர்கள் காத்திருப்பர். 

நீ எழுதும் முன்னுரை படைப்பை விட அதிக கவனம் கொள்வதை நீ விரும்ப வேண்டும்.

ஒரு படைப்பாளியிடம் இருந்து இரண்டு வேறு முக்கிய தகவல்களை பெறும்போது உன் சிந்தனை வீச்சு கூடும் அல்லவா?

உண்மைதான் ஸ்பரி... ஜெயகாந்தன் முன்னுரைகள் என்பது இப்போது என் நினைவுக்கு வருகிறது என்றாள்.

நான் மீண்டும் கணிப்பொறியை இயக்க ஆரம்பித்தேன்.

          🌺🌺🌺🌺🌺

_____________________

எழுதியவர் : ஸ்பரிசன் (4-Jul-20, 12:50 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 15

மேலே