பணி ஓய்வு

நாம் பணி ஓய்வு
பெற்று விட்டோம்...! !

ஆனால்..
இது நம் வாழ்க்கையின்
ஓய்வு அல்ல..! !

இந்த "ஓய்வு காலத்தை"
சிலர் ரசிக்க
பலர் தவிக்க
பார்க்கின்றோம்..!

ஓய்வு காலம் என்பது
நம்முடைய
"வசந்த காலம்"...! !

இந்த வசந்த காலத்தை
எதற்காகவும்
யாருக்காகவும்
சமரசம் செய்து
கொள்ள வேண்டாம் ..!

வேண்டாத சுமைகளை
சுமந்துகொண்டு
"சுமை தாங்கியாக"
இருக்க வேண்டாம்...! !

சுதந்திர பறவையாக
மாறுங்கள்...! !
வானத்தில் உல்லாசமாக
பறந்து செல்லுங்கள்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Jul-20, 9:02 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : panay ooyvu
பார்வை : 78

மேலே