சந்திராயன்

சிவன் தலையில் உலவும் நிலவு.
சிவன் தலைமையில் நிலவில் உளவு.
வேகம் காட்டுவான் தமிழன்
வேலையில்.
வேகமெடுத்தது லேண்டரும்
நிலவில்.

பெண்ணுக்கு உவமை நிலவெனவே
வெண்மதி முத்தமிட
வேகமெடுத்ததோ லேண்டர்?
முத்தமிடும் காட்சி உலகம்
பார்க்கலாகாதென தொடர்பை
துண்டித்து விட்டாயோ?

முக்கால்வாசி முடிந்ததற்கே,
மூக்கின் மேல் விரலை வைத்தோம்.
முழுதாக முடிந்திருந்தால்,
முடிசூட்டி நாம் மகிழ்ந்திருப்போம்.

இது தோல்வியல்ல.
வெற்றிகரமான தோல்வி.
சமாதானம் செய்துகொள்ள,
சமர்த்தான கட்சிகளிடம் கேள்.
சந்திராயன் மலர்ந்தே தீரும்.

அயல்நாடு நிலவுக்காக,
அள்ளிச் செய்த செலவில்,
கிள்ளி நாம் செலவு செய்து,
கீர்த்தியைப் பெற்றுவிட்டோம்.

முன்னிருந்த சந்ததி நிலாக்காட்டி
சோறு ஊட்ட,
பின்வரும் சந்ததி நிலாவின் மேலே
சோறூட்டும்.
வெற்றி தவறிய பாடம் இது.
கற்று நாடு வெற்றி பெறும்.
கலைகளில் நாம் தேருவோம்.
கவலைகளில் நாம் தேறுவோம்.

ச.தீபன்

எழுதியவர் : தீபன் (6-Jul-20, 4:47 pm)
பார்வை : 107

மேலே