உன்னுடன் என் காதலும்

உன்னை இன்னொருவன்
உறவாக்க உறுதிசெய்த
உண்மை உறைக்கும் போதுதான்;

அன்பான, நட்புடன்!
அமைதி ஊர்வலமாய் போனது;
காதல் கலவரமாய் உருமாறியது!

திசை திருப்பநான் திரும்பிய
திக்கெள்ளாம் உனது;
திடுக்கிட்டு நின்றதென் மனது;

புலம்பி, அழுது புரண்டு;
புண்ணான இதயத்தை ஆற்றி;
புதிய நாட்களில் பயணிக்கையில்!

நீ, நான், நாம் என்று நினைவுகளை; குறுஞ்செய்திகளாய் நிறப்பி;

உன்னிடம் அனுப்பி வைக்க அனுமதி கோரிய போதுதான் உதித்தது;
இதில் எதுவும் என்னுடையது மட்டுமே இல்லையே!

உன்னுடையதும் தானே என்று;
உயிர் வாழ்வது!
உன்மை தானா?
உன்னுடன் என் காதலும்..

எழுதியவர் : பூ பாலச்சூரியன் (8-Jul-20, 7:40 am)
சேர்த்தது : அப்துல்லாஹ்
பார்வை : 288

மேலே