ஆம் முத்தமிட ஆசை
ஆம் ! முத்தமிட ஆசை...
அலர்ந்து சிரிக்கும் மலர்களை
அணைத்து முத்தமிட ஆசை
துள்ளி ஓடும் கன்றுக் குட்டியை
அள்ளி முத்தமிட ஆசை
கோடிமலர் புன்னகை ஏந்தி
தாவி வரும் பெயர்த்தியை
ஓடியணைத்து உச்சி முகர்ந்து
ஆவிதழுவிட முத்தமிட ஆசை
ஆறடி உயர்ந்து மீசை அரும்பினும்
மார்புடன் தழுவி மகனை முத்தமிட ஆசை
ஓசையில்லா ஓரிடம் தேடி
பாசைகள் மறந்து பரிச்சயம் துறந்து
ஏகாந்தமாய் மௌனத்தை முத்தமிட ஆசை!