புரிதல்கள் யாவும் தோழமையாய்

தோழமையின் சுவாசமே........

புரிதல்தான்!
ஒருதலைப் புரிதல் அல்ல!
பரஸ்பர புரிதலே!
புரிதல் நிற்பின்...........?
சுவாசம் நிற்கும்!
மனிதனின் உயிருக்கு
ஒருவரின் சுவாசம்!
தோழமையின் உயிருக்கு............?
இருவரின் சுவாசம்! அது.........
இருவரின் புரிதலால்!
சுவாசத்தில் கமழ்வது
நட்பென்னும் உறவின்
நேசத்தின் வாசம்!

எழுதியவர் : ம கைலாஷ் (8-Jul-20, 9:55 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 231

மேலே