புரிதல்கள் யாவும் தோழமையாய்

புரிதல் என்பது
நட்புறவு அல்லது ரத்த உறவு எனும்
நலம் தரும் மரத்தின்
விதை!
விதைத்து விட்டாலே போதும்!
நம்பிக்கை எனும் வடிவில்
வேர் விட்டு,
உரமின்றி, நீரின்றி ஏன்
ஒளியும் இன்றியே
விருட்சமாய் வளர்ந்து விடும்!
நட்புறவாயினும்........
ரத்த உறவாயினும்........
தோழமையாய் அது
தரிசனம் தரும்!
விதையின் பலத்திலேயே
அவதரிக்கும் மரமிது!
எப்படி?
விதை அத்தனை நுணுக்கமானது!
புரிதல் அத்தனை ஆழமானது!

எழுதியவர் : ம கைலாஷ் (9-Jul-20, 11:54 am)
சேர்த்தது : M Kailas
பார்வை : 210

மேலே