தவறான புரிதல்
உயிரென உறவா இருந்தோமே.
உணவிலும் உறவை பகிர்ந்தோமே.
ஒவ்வொரு நாளும் ஒன்றாய் திரிந்தோமே.
ஒன்றுமறியாமல் இன்று ஏனோ பிரிந்தோமே.
அருகில் இருந்தும் ஏனோ
தூரங்கள் பல போனாயே.
நீ தூரமாய் போனாலும்
என் நட்பது குறையலயே.
நான் துரத்தி வந்து உனையும்
சேர நினைக்கவில்லையே.