இடர்தனில் சுடர்விடு

இடர்தனில் சுடர்விடு

நான் விளக்கின் ஒளியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பார்க்க பார்க்க எனக்குள் ஒளி புகுந்து என்னை மேம்படுத்தி கொண்டிருந்தது.
" எனக்குள் இருக்கும் இறையே ,
உனை நான் உணர்வது முறையே
உனை நான் உணர்வதனாலே என் வாழ்வும் உயர்ந்திடும் மென் மேலே "
என்ற வரிகள் எனக்குள் வந்த வண்ணம் இருந்தது.
இன்று பிரதாப் என்னிடம் பேசுவதாக சொன்னான். என்ன பேசப்போகிறான் என்று என்னால் யூகிக்க முடிந்தது. அவன் எனக்கு நல்ல நண்பனும் கூட. என் வீட்டின் அருகில் வசிக்கிறான். நண்பனாய் நிறைய உதவிகள் செய்கிறான். என் வீட்டில் நான், என் வயதான தந்தை, என் மாமனார், மாமியார் மற்றும் என் குழந்தைகள் வாழ்கிறோம். குழந்தை ஸ்வாதி 12th படிக்கிறாள்; என் மகன் சுரேஷ் 9th படிக்கிறான்; நான் கடவுள் அருளால் பெரிய ஐ டி கம்பெனி ஒன்றில் ப்ராஜெக்ட் லீடர் ஆக பணியில் இருக்கிறேன்.
"என்னமா மீரா நேரமாகலை" - என்ற வார்த்தையில் களைந்தேன்.
"சொல்லுங்க அத்தை "- என்றேன்.
"என்னம்மா இன்னைக்கு ரொம்ப நேரம் பிரேயர் பண்ற? - ஏதேனும் முக்கியமான விஷயமா "- எனது மாமியார் பாகிரதி கேட்டார்.
"இன்னிக்கு சாமிகிட்ட எக்ஸ்ட்ரா ரெண்டு நிமிஷம் பிரேயர் பண்ணனும்னு தோணித்து அதான்" ;
"ஸ்வாதி ,சுரேஷ் க்கு ஸ்பெஷல் கிளாஸ் ஏதேனும் இருக்கா? இல்லை ரைட் டைம் க்கு ஸ்கூல் முடிந்து வந்திடு வாங்களா? "- என்ற படி என் அப்பாவும் , மாமாவும் வாக்கிங் முடித்து வீட்டுக்குள் வந்தார்கள்;
"இல்லை மாமா; இன்று ஃப்ரைடே ; நோ ஸ்பெஷல் கிளாஸ்ஸஸ். " கரெக்ட் டைம் க்கு வந்திடுவார்கள்;"
ஓகே ம்மா "- உனக்கு இன்று ஆபீஸ் இருக்கில்ல ; நேரமாச்சு ; நீ கிளம்பு. " என்றார் அப்பா சாம்பசிவம்.
சி யு ம்மா " என்றார் மாமனார் பரந்தாமன். பெயருக்கு ஏற்ப குணத்திலும் பரந்த மனம் படைத்தவர். தனது மகன் தவறு செய்த போது தப்புன்னு தட்டிகேட்டவர். பென்ஷன் பணம் முழுதும் குடும்ப செலவுக்கு கொடுத்து மகிழ்பவர்.

சரி மாமா : என்று வெளியேறும் போது லதா வீட்டு வேலை செய்ய நுழைந்து கொண்டிருந்தாள்;
சிரித்தபடி எல்லாரையும் பார்த்துக்கோ என்று விரைந்தேன்;
ஆபீஸ் பஸ் பிடிக்க; நல்ல வேலை; பல நேரங்களில் பஸ் மிஸ் பண்ணாமல் இருப்பது மார்னிங் ட்ராபிக் னால தான். சோ தேங்க் காட்;
பல்லாவரம் தான் முதல் ஸ்டாப் என்பதால் நல்ல இடம் தேடி அமர்ந்தேன்; வேகமாக ஓடி வந்து பிரதாப் ஏறினார்; சினேகமாக சிரித்துக் கொண்டோம்.
நல்ல காற்று முகத்தில் பட.. சந்தோஷம் என்னுள் பரவியது. அந்த சந்தோச நாட்களும் என் மனதுக்குள் பரவியது.
இரண்டு வருடம் முன்பு வரை குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா ... என்று மனமுருக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தவள்.
நன்றாக ஓடிக் கொண்டிருந்த எங்கள் வாழ்வில் ஏனோ தெரிய வில்லை. பிரிவு புயல் தாக்கியது.
திலீப். என் காதல் கணவர். என் வாழ்நாள் துணைவர். என்ன சொல்ல? ஏது சொல்ல ?
வாழ்க்கை பிறந்தது வாழவே; வாழ்வில் தொடர்ந்து இன்பமே; என்று நானும் திலீப்பும் சிறகடித்து பறந்த கல்லூரி காதலர்கள்; எங்கள் ஒவ்வொரு நொடியும் இறைவனால் நன்றாக செதுக்கப்பட்டது. இருவரின் பெற்றோரும் நல்லபடி சம்மதித்து திருமணம் செய்து வைத்தார்கள்; நல்ல படி வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது; அருமையான குழந்தைகள் ; பதினைந்து வருடம் உருண்டோடியது.
அவர் என்னை விட்டு பிரிந்து யூ.ஸ் ப்ராஜெக்ட் ஒன்றுக்கு கிளம்பினார். குழந்தைகளின் படிப்புக்காக என்னால் உடன் போக இயலவில்லை; வயதான பெற்றோர்கள்; எனக்கும் இங்கு நல்ல சம்பளம்; நல்ல ஆபீஸ்.
இரண்டு வருடம் ஓடியது. திலீப் சுத்தமாக மாறிவிட்டான். பாரின் மோகம் அவனுக்குள் அனைத்து கெட்ட பழக்கத்தையும் கொடுத்தது. அவன் தனக்கென்று வேறு பெண்ணை அங்கேயே தேர்ந்தெடுத்து மணக்க விரும்பி எனக்கு விவாகரத்தும் கொடுத்து விட்டான் . இத்தனை வருடம் என்னுடன் இருந்து அத்தையும், மாமாவும் பழகி விட்டார்கள் ; குழந்தைகளும் அவர்களின்றி இருக்க மாட்டார்கள்; நானும் அவனுக்கு விவாகரத்து கொடுத்து விட்டேன்;
இரண்டு வருடம் வேகமாக ஓடிவிட்டது; பிரிவு எனக்கு பழகிவிட்டது. முன்பே பிரதாப் நன்கு எங்களுக்கு அறிமுகம். அவரது மனைவி இறந்த பின் அவரும், அவர் அம்மா மற்றும் பெண்ணும் தான் வாழ்கிறார்கள் ; அவர் பெண் சுபா எப்போதும் எங்கள் வீட்டில் தான் இருப்பாள்; நான் பிஸி யாக இருக்கும்போது என் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான உதவிகள் பிரதாப் செய்வார். நல்ல மனிதாபிமானி.
பெருத்த ஹார்ன் சப்தம் கேட்டு நினைவுகள் களைந்தேன். இன்று ஆபீஸ்ல இருக்கும் வேலையின் நினைப்பு தொற்றிக் கொண்டது.
மாலை ஆறு மணிக்கு பிரதாப் யை சந்திக்கிறேன்னு சொல்லிருக்கேன்.
அவர் என்ன பேசப் போறாருன்னு என்னால் யூகிக்க முடிந்தது. சரி நாமாக எதுவும் யோசிக்க கூடாதுன்னு வேறு வேலைகளில் மூழ்கிவிட்டேன். மாலை 5 .30 மணிக்கு ஆபீஸ் விட்டு கிளம்பி விட்டேன்.

பக்கத்துல ஒரு பார்க் இருக்கு. அங்கே போகலாம் என்று நான் தான் சொன்னேன். சரி என்று பிரதாப் முன்னால் சென்றார். நானும் உடன் சென்றேன். மௌனம் கொஞ்ச நேரம் பேசியது. ஒரு சின்ன பையன் "அங்கிள் கொஞ்சம் நகருங்க" என்று அதை களைத்தான்.
"சொல்லுங்க என்ன பேசணும்னு சொன்னீங்க"- மீரா;
"நான் என்ன கேட்கப்போறேன்னு உனக்கு நிஜமாவே புரியலையா ?" - பிரதாப்.
"நீங்க சொல்லுங்க " - மீரா ;
"எத்தனை நாளைக்கு நீ இப்படியே தனியா இருக்கப்போற ?" - பிரதாப்.
"நான் தனியா இல்லை; என்னுடன் என் குடும்பம் உள்ளது ;-மீரா ;
"புரிஞ்சிக்காமல் பேசாதே; நான் சொல்வது உன் தனிமையை ; பிரதாப்
"புரியாமல் இல்லை; நான் வாழும் வாழ்க்கை முறை தனிமையை போக்குகிறது.எனக்கு சந்தோசம் மட்டுமே தருகிறது"
"வேறு என்ன வேண்டும்னு நினைக்கிறீர்கள்?" -மீரா.
"உன் கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார். உனக்கும் வெறுமையை நீ உணர்கிறாய் ?" - உன்னுடன் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள விரும்புகேறேன். உனக்கும் புரிந்திருக்கும்" - ஆனால் நீ எதுவும் சொல்ல மறுக்கிறாய். "-பிரதாப்.
" எனக்கு அந்த எண்ணம் நிச்சயமாய் இல்லை ". அவரை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். காதலின் பரிசாய் அருமையான இரண்டு குழந்தைகள். என் வரையில் காதல் வாழ்க்கை என்றும் நினைவுகளாகவே இருக்கட்டும். அவர் என்னை விட்டு பிரிந்த பின்னும் என் மாமனார், மாமியார் என்னுடன் குழந்தைகளை கவனிக்க இருந்து விட்டார்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் புரியாது. உனக்கு புரியுமா என்று தெரியலை " – நான், எனது, என் சுகம் என்று மட்டும் வாழ்வது வாழ்க்கை இல்லை ; நாம், நம் மக்கள், நம் வீட்டு பெரியோர்கள் என்று நினைத்தால் வாழ்வில் எப்போதுமே வெறுமை இல்லை ;" - மீரா ;
நீ என்ன சொல்ல வருகிறாய்? " -பிரதாப்.
"இன்றைய தலைமுறைகள் பெரும்பாலும் சிறு வயதிலேயே சந்திக்கும் பெரிய பிரச்சனை - உறவு சிக்கல்கள் என்பது என் கருத்து; அதை நம் குழந்தைகளுக்கு கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை; அது தான் குழந்தைகளை பெரிய குழப்பத்தில் தள்ளுகிறது; இன்றைய ஒவ்வொரு உறவுகளும் அதனதன் இடத்தில் அதனதன் வரம்புகளில் இருப்பதே இல்லை ; நாம் தான் நம் சுயநலத்துக்காக முன்னேற்றம் என்ற பெயரில் நாகரீகம் என்ற பெயரில் உறவு சிக்கல்களை அடுத்த தலைமுறையின் மீது திணிக்கிறோம். எங்க அம்மா இறந்த பின் என் அப்பா எங்களுக்காக வாழ்ந்தார்; நம் முன்னோர்கள் சுயநலம் இன்றி நமக்கான வாழ்வியல் சுதந்திரம் கொடுத்தார்கள் ; ஆனால் நாமோ நம் சலன மனதை சுதந்திரம் என்ற பெயரில் தீனி போட நினைக்கிறோம். "- மீரா ;
"நம் தேவைகளை அனுமதிப்பது தவறா? " - பிரதாப்.
"தேவைன்னு நினைத்தால் எல்லாமே தேவை தான்"- தேவைகள் எப்போதுமே இருக்கும். அது நமக்கு தேவையா? இப்போது என்று சிந்திக்க வேண்டும்.
நீ உடல் தேவைகளை பற்றி சொன்னால், இன்னும் ஐந்தே வருடங்கள் தான் அது இருக்கும். அதற்கு பிறகு நம் தேவைகள் மனம் சம்பத்தப்பட்ட நட்பை மட்டுமே எதிர்பார்க்கும். அது நிச்சயம் எப்போதும் உனக்காக நல்ல நட்பாக காத்திருக்கும்.
எல்லா விஷயங்களும் எல்லாராலும் நிரப்பிட முடியாது. கடவுளும், தாயும், தந்தை மற்றும் நல்ல குரு இவர்களை யாராலும் நிரப்ப முடியாது. நிரப்பவும் கூடாது என்பது என் கருத்து."
"ஏன்? என்ற உன் கேள்வி புரியுது. இறைவன் அம்மா, அப்பா என்ற இரு உறவுகளை இந்த உலகில் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்தார்; ஏன்னா, ஒன்று இல்லாவிட்டாலும் இன்னொன்று அந்த குழந்தையை காக்கும் என்று.
“அப்பா என்ன தப்பு செய்தாரோ அதை செய்ய கூடாதுன்னு என்று என் பையன் கற்றுக்கொள்ளனும். அம்மா போல இந்த உலகில் திடமாக வாழமுடியும் என்ற நம்பிக்கையை என் பெண் கற்றுக்கொள்ளனும்.”
இந்த உலகில் அந்தந்த உறவுக்கு நம் வாழ்வியல் முறைகளில் இடம் இருந்தது. அது இப்போது மாறியதனால் தான் இந்த தலைமுறை குழந்தைகள் எல்லா இடங்களிலும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
இன்றைய நிலையில் நாம் மட்டுமே நம் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை வாழ்ந்து காட்டி புரிய வைக்கணும்.
ஏன்னா, நம்மைத்தவிர வெளி உலகம் அனைத்தும்,அத்தனை டிவி சேனல்ஸ் எல்லாவற்றிலும் தப்பான உறவுகள் மற்றும் தேவையற்ற நிகழ்வுகளை காதல் என்ற பேரில் எப்போதும் ஒளிபரப்புகிறார்கள்."

ஏன் ? அடுத்த தலைமுறைக்கு சொல்ல நமக்கு வேறு ஒன்றும் இல்லையா ?" -
"சாரி பிரதாப்; உங்க குழந்தைக்கும், என் குழந்தைகளுக்கும் இந்த சிக்கல் வளரும் பருவத்தில் தேவையில்லை என்று நினைக்கிறேன். " - மீரா;
வாழ்க்கை பயணமதில் ஒரு சில இடங்களை கடந்து விட்டால் அடுத்த நிலைக்கு முன்னேற நம்மை பழக்கிக்கணும் பிரதாப்" – என்றாள் மீரா.
"இரண்டாவது திருமணம் என்பது நம் முன்னோர்கள் செய்ததில்லயா ? - பிரதாப்;
" அது அவசியத்துக்கு சொல்லிக் கொடுத்தது; கணவனை இழந்த பெண்கள் தன் குழந்தைகளோடு பாதுகாப்பாக இருக்க கொண்டுவரப்பட்டது; "
"இன்றும் அவசியத்துக்கு செய்யலாம்; ஆனால் அனாவசியமாக செய்யக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து. - மீரா;
"எது அவசியம்? "- பிரதாப்;
"ஒரு பொண்ணு தன் கணவனை இழந்து ஆதரவு இல்லாமல் இருப்பது; துன்புறுத்தும் கணவனிடம் இருந்து விடுதலை பெற்ற பெண்கள்; தன் துணைவியை இழந்து குழந்தைகளை பாது காத்திட இயலாமல் இருப்பது; "
ஆனால் இன்று ஒரு ஆணும் பெண்ணும் எதற்கெடுத்தாலும் பிரிந்து விடுகிறார்கள். தன் மனதை கட்டுப்பாட்டில் வைக்காமல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற மேல் நாட்டு நாகரீகங்களை கொண்டு எத்தனையோ நல்ல உறவுகள் சொல்லி கொடுக்க வேண்டிய நம் சமுதாயம் அனைத்தையும் சீரழிக்கிறது; "-மீரா;
"இது தான் உன் முடிவா ? - பிரதாப்;
"சாரி ப்பா; உன் குழந்தையும் என் குழந்தை போல தான். இன்று ஆண்ட்டி என்று என்னுடன் சந்தோசமாக பழகும் அவள் அதே சந்தோஷமுடன் எப்போதும் இருக்கணும்."
நம்மின் இன்றைய சந்தோஷத்திற்காக குழந்தைகளின் நாற்பது வருட வாழ்வை சிக்கலாக்க கூடாது. " - படிக்கும் வயதில் நாளை இந்த குழந்தையும் தவறு செய்ய நாமே காரணமாக கூடாது; குழந்தைகள் தவறு செய்தால் தட்டி கேட்கும் நிலையிலாவது பெற்றோர்கள் இருக்கணும்னா முதலில் அவர்கள் சரியாக இருக்கணும்னு நான் நினைக்கிறேன்;
“உங்க குழந்தைக்கு ஒரு தாய் வேண்டும்னு நீங்க நினைத்தால் நிச்சயம் ஒரு அவசிய தேவை உள்ள பெண்ணை பார்த்து மணந்து கொள்ளுங்கள்; அப்போது தான் அந்த பெண்ணும் நல்ல தாயாக தியாக உள்ளத்துடன் நடந்து கொள்வாள்
நாம் எப்போதும் நல்ல நட்புடன் இருப்போம்.
இப்போது கிளம்பலாமா? -;”- மீரா ;
சரி " வா போகலாம் " - என்று பிரதாப்பும் கிளம்பினார்.
"கோபமா ? " -பிரதாப்.”-மீரா ;
"கொஞ்சம் வருத்தமும் கூட; ஆனால் , உன் சுயநலமில்லா சிந்தனை நிச்சயம் நம் குழந்தைகளையும் சுயநலமில்லா நல்ல குழந்தையாக வளர்க்க உதவும் " -
ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முடிவு செய்த பின்னர் தான் குழந்தைகளை பெற்றுக் கொள்ளணும். அது தான் இந்த சமுதாயத்துக்கு நாம் செய்ய வேண்டிய நல்ல கடமையும் கூட;
எனக்கு இதை புரிய வைத்ததற்கு உனக்கு நன்றி " - என்றார் பிரதாப். வீட்டுக்குள் நுழையும் போதே குழந்தைகளின் சப்தமும் பெரியோர்களின் சிரிப்பும் என்னை வரவேற்றன;
நானும் சந்தோசமாக உள்ளே நுழைந்தேன்; இந்த மன நிம்மதியை கடவுளின் அருளால் என்றும் நான் காப்பேன் என்ற நினைவோடு.
மாமா குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார் "
தன் சுகத்திற்காக மகாகவி பாரதி தேவையான கோபத்தை விடவில்லை -
தன் சுகத்திற்காக காந்தி தாத்தா சுதந்திர தாகத்தை விடவில்லை ;
தன் சுகத்திற்காக கட்டபொம்மன் வீரத்தை விடவில்லை;
தன் சுகத்திற்காக பாம்பன் ஸ்வாமிகள் கடவுள் மீதான பக்தியை விடவில்லை;
இவர்களுக்கெல்லாம் மனதில் உறுதி இருந்ததால் எத்தனை இடர் வரினும் இறைவன் சுடராய் வழிநடத்திடுவான்.

அப்போ , ஒற்றுமைன்னா என்ன தாத்தா என்று பிரதாப் மகள் சுபா கேட்டாள்;
சுயநலமின்றி நமக்குள் விட்டுக் கொடுப்பதும் வெளியாட்களிடம் நம் மனிதர்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் தான் ஒற்றுமை என்று என் அப்பா சொன்னார்; சுபா, உங்க வீட்டுக்கு போம்மா, நேரமாச்சு என்றபடி.
"வந்திட்டயா வா வா நல்லபடி வேலை முடிந்ததா? சரி ; நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்ற என் மாமியாரின் குரல் உரிமையுடன் என்னை அணைத்துக் கொண்டது.;
இந்த சந்தோஷமும்,மன நிம்மதியும் தான் நம் கலாச்சாரம் வழி வழி யாக நமக்கு சொல்லிக் கொடுத்தது; வாழ்க பாரதம் ; வாழ்க அதன் பண்பாடு;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (9-Jul-20, 12:37 am)
பார்வை : 165

மேலே