பிரேக்கிங் நியூஸ்

வீடு அமைதியாக இருந்தது .சிவா என்ற சுப்ரமணியசிவா ஈசி சேரில் சாய்ந்து இருந்தார். அவரை சுற்றி தர்மபத்தினி தாரங்கிணி மகள் சுவாதி மகன் அஸ்வின் சிவாவின் தங்கை பார்வதி உட்கார்ந்திருந்தார்கள் .அனைவரின் முகத்திலும் சோகம் குப்பென்று அப்பிக் கிடந்தது.

எதிரில் இருந்த தொலைக்காட்சி பரபரப்பான செய்தியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி கொண்டிருக்க என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பி கிடந்தது குடும்பம். பிரேக்கிங் நியூஸ் என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்க்க பார்க்க ரத்தக்கொதிப்பு அதிகமாவது போல் உணர்ந்தார் சிவா.

பார்வதி தான் முதலில் பேச ஆரம்பித்தாள் .அண்ணா இப்படியே உட்கார்ந்து இருந்தா எப்படி?
அனைவரும் சுய நினைவுக்கு வந்தார்கள்.

தொலைக்காட்சியின் சத்தம் கூட இதுவரை கேட்காமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது ."மனம் எதில் ஒன்று கிறதோ அதில்தான் ஐம்புலன்களும் ஒன்றும் " என்பது சரிதான் என்று புரிந்தது." என்ன சொன்ன பார்வதி"? சிவா கேட்டார்.

இப்படியே திக்பிரமை பிடித்து உட்கார்ந்து இருந்தா எப்படி ண்ணே? இப்பவே ராத்திரி ஒரு மணி ஆகப்போகுது.

ஆமாம்பா .போய் தூங்கலாம் அப்பா .காலைல பேசிக்கலாம் .அஸ்வின் குரல் கொடுத்தான்.

அனைவரும் படுக்கைக்கு சென்றார்கள்.

விடிவதற்கு முன்பே விழுந்தடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்து தொலைக்காட்சியை தட்டிவிட" பிரேக்கிங் நியூஸ்" அதே செய்தியை வெளியிட்டுக் கொண்டிருந்தது .இந்தியா முழுவதும் கொரானா பரவுவதால் பதினைந்துநாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அது எதுவும் இந்த குடும்பத்தின் காதுகளுக்குள் இறங்கவில்லை. திருமணம் அரசின் அனுமதி பெற்று 15 பேர்கள் அதிகமாக 20 பேர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

என்னங்க பண்றது .நாளைக்கு சாயந்தரம் மாப்பிள்ளை அழைப்பு வைச்சு இருக்கோம்.ஒன்னுமே புரியல !மாப்பிள்ளை வீட்டுக்கு என்னன்னு சொல்றது ?கல்யாணத்தை நிறுத்த முடியாது .ஒரே குழப்பமா இருக்கு.

வாசலில் கார் வந்து நின்றது. எல்லோரும் எழுந்து வாசலுக்கு ஓடினார்கள் .சம்பந்தியும் மாப்பிள்ளையாக போகிற மாப்பிள்ளையும் இறங்கிவர அனைவரும் வணங்கி வரவேற்றார்கள்.

வாங்க சம்மந்தி வாங்க !வாங்க மாப்பிள்ளை! இப்பதான் நாங்க பேசிக்கிட்டு இருக்கோம். உள்ள வாங்க .உள்ள வாங்க.

அனைவரும் உட்கார அனைவருக்கும் காபி கொடுக்கப்பட்டது .கேள்விக்குறியோடு சம்பந்தி முகத்தைப் பார்த்து சிவா தான் முதலில் பேச ஆரம்பித்தார் .எல்லா ஏற்பாடும் முடிஞ்சுது. மண்டபத்தில் காண்ட்ராக்டர் வந்துருவாரு. வாழைமரம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. நாளைக்கு சாயந்தரம் மாப்பிள்ளை அழைப்பு வச்சுக்கணும் .
அதான் என்ன பண்றதுன்னு......?

குழம்பிகிட்டு இருப்பீங்க ன்னு எனக்கு த்தெரியும் .எப்படி எனக்கு சொல்றதுன்னு புரியாம எல்லாரும் குழப்பமாஇருப்பிங்கன்னும்நான்புரிஞ்சுகிட்டேன் .அதனாலதான் உடனே புறப்பட்டு வந்தேன்.
இங்க பாருங்க சம்பந்தி எதற்கும் கவலைப்பட வேண்டாம். இப்ப கொரானா கிருமியினால் பிரதமர் அறிவித்திருக்கிற ஊரடங்கு கட்டுப்பாடு ரொம்ப அவசியம். அதனால நீங்களும் சரி நானும் சரி யாருக்கெல்லாம் பத்திரிக்கைஅனுப்பிச்சோமோஅவங்களுக்கெல்லாம் வாட்ஸ் அப்ல மெசேஜ் அனுப்பி விடுவோம் .எல்லாரும் அவங்கவங்க அங்கிருந்தே வாழ்த்தட்டும் உங்க குடும்பம் எங்க குடும்பம் மொத்தமா ஒரு பதினைந்து பேர் நம்ம வீட்டிலேயே கல்யாணத்தை முடிச்சிப்போம்.சரிதானே .முகூர்த்தம்மாற வேண்டாம் .என்ன சொல்றீங்க என்று சிவாவையும் தரங்கினியையும்பார்த்தார்.

சரியா சொன்னீங்க சம்மந்தி. ரொம்ப குழப்பம் ஆயிட்டோம் .இந்த பிரேக்கிங் நியூஸ் கேட்டு பிரேக் கே இல்லாம கலங்கித்தான் போயிட்டோம். நீங்க வந்து தான் பிரேக் போட்டு சரியான முடிவைச் சொல்லி இருக்கீங்க .ரொம்ப சந்தோசம் .வீட்டோட நம்ம குடும்பத்தோட சந்தோஷமா நம்ம பொண்ணுக்கும் உங்க பையனுக்கும் கல்யாணத்தை முடிச்சுரொம்பசந்தோஷமாஇருப்போம். இருந்துசாப்பிட்டுட்டு போங்க..

வந்தவர்கள் மகிழ்ச்சியால் எழுந்து காருக்கு நடந்தார்கள்..

எழுதியவர் : சு.இராமஜோதி (7-Jul-20, 11:55 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 162

மேலே