தங்கச்சி பொண்ணு

அன்னையின் மகள்!
அழைப்பேசி வழியே.....!!

அண்னே நல்லாருக்கியா..?
அண்ணி, புள்ளைங்களா...
எப்படி இருக்காங்க.?

எல்லா... நல்லா இருக்கோம்
நீ எப்படி இருக்க
மாப்ள.. எப்படி இருக்கார்...?

இருக்கே. ன்.. னே.
அவருக்கு! தா! சரியா வேலையே
இல்லை.

வீட்டு வாடகைய வேற இந்த மாசத்துல இருந்து மூன்னூறு அதிகமாக்கி டாய்ங்க..

காயத்திரி டியூசன் பீஸ் கட்டாம கெடக்கு.. வீட்ல தா இருக்கா..

அதவிடுனே..

அண்ணி வேலைக்கு போயாச்சா?

நா அவள ஆஃபிஸ்ல விட்டுட்டு
தான் கடைக்கு வந்தேன்.

நரேன் எங்க வேலைக்கு
போறன்?

எதோ இன்ட்ரிவ் போய்ட்டு வந்தான்;
கடைல தா என் கூட மாட ஒத்தாசையா இருக்கான்..

ஊருக்கு போண் பன்னியா?
கனகண்ணன; மாடு முட்டிடுசாம்!

ஆ; ஆமா; ஆமா;
ஆனா பயப்பட ஒன்னு இல்ல;
நல்லாத்தான் இருக்கானா.

இல்லனே;

எங்கவூட்டுகாரர்; தனியா வேலை எடுத்து செய்யலானு;
அதுக்கிட்ட தா.. பணம் கேட்டுருக்கு;
அந்த அண்ணனும் கரும்பு பணம் போட்டது தாரேனுச்சாம்..

வேலைக்கு சொன்ன இடத்துலையும்; நாளைக்கே பணத்தை கட்டிட்டு வேலைய ஆரம்பிக்க சொல்றாங்க.

இப்ப என்ன பன்றதுனே புரியல..

சரி சரி நீ என்ன
சொல்ல வரனு புரியுது...

எவ்வளோ வேணும்னு கேக்கர; அந்த நிலைம இப்ப இல்லை;

இருந்தாலும் ஒன்னு சொல்றே;
அம்மா சாவுக்கப்பறமா என் பங்கா கொடுத்த பணம் இருக்கு;
அத வச்சு என்னமாய்சு பன்னுங்க; இந்த தடவையாச்சும்;
வேலையை நல்லபடியா செய்ய சொல்லு.

இல்லனே எதுக்கு அண்ணி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லு.

மாலதி...
நீ பேசும் போதுதெல்லா
அண்ணி இருக்கா இல்லையானு
கேட்டுட்டுதா பேசர;
ஆனா அவ ;
அந்த பணம் வந்த அன்னைக்கே;
மாலதி புள்ளைங்க வயசு வந்து வருசமாவுது; அவங்க ஒன்னு செய்யர மாதிரி தெரியல;
நாமலாவுது அதுங்க, கழுத்து, காதுகாவுது நகை எடுத்து செய்யலானு சொன்னா;
நா...தா..
வச்சி..தின்னுடுவாய்க
வேண்டாம்னு சொன்னே;
இப்ப கூட உன் இஷ்டம் தான்
அத உருப்படி ஆக்கரதும் ஆக்காததும்.

அப்டிளா அகாதுணே
ரெண்டு மாசத்துல
நா கொடுத்தரேன்; நீயும் அண்ணியும் ஆசபட்டமாறி செய்ங்க.

ஆமா; ஆமா;
அப்படி நீயும் உன் வீட்டுகரனும்
வங்குனத திருப்பி கொடுத்திருந்தா
உன் பொண்ணுங்க கல்யாணமே
நடத்திடலாம்.

என்னத்த சொல்றது;
எல்லா என் தலையெழுத்த தா நொந்துக்க முடியும்.

இரு... இரு;
நீ அழுதா
என்னா மாறப்போது.

மாலதி..
நா;
இப்ப கூட; இதப் பேசலைனா
உனக்கு புரியாம போயிடும்.

நம்ம வீட்ல எல்லா
நல்லது கெட்டது பாத்துட்டு
இருக்கு பேதே; வயசு போச்சி;

கல்யாண பண்ணி;
கொஞ்ச நாள்லயே;
ஆக்ஷ்டென்ட்ல கால் போயி
சக்கர நாற்காலிக்கு வந்துட்டேன்.

இப்ப வரைக்கும் என் பொண்டாட்டி புள்ளைக்குனு எதாவது நா செஞ்சி இருக்கனா?

ஒவ்வொரு முறை நீ எது கேட்டாலும்;
சரி இப்போ சரியாகிடும்;
அப்புறம் சரியாகிடும்னு தா நினைக்கிறேன்;

உன் வீட்டுகரரும் வேலைக்கு
போகாம இருக்க வெயில், மழை, தூரமா இருக்கு, கஷ்டமா இருக்குனு ஆயிரம் காரணங்க;
ஒரே ஒரு காரணம் கூட இல்லையா வேலைக்கு போறத்துக்கு.

நானும் இதே பூமிலதான் வாழ்றேன்; எனக்கும் நீ சந்திக்கர எல்லா கஷ்டமும் வரதானே செய்யும்;
வேற வேற மாதிரி இருக்கும்;
இங்கதான வாழனும்?

நல்லா இருக்கேனு செல்வது ஆரோக்கியமான
ஊக்கமான வார்த்தை.
உடனே நா எந்த கவலையும் இல்லாதவன் அர்த்தம் இல்ல.

உன் வாழ்க்கையை;
நீ வாழ பழகு;
பிள்ளைக்கும் சொல்லிகுடு.

மாலதி..

இருக்கேனே;

யோசிச்சு பாரு;

சரி பணத்தை அனுப்ப சொல்லிறேன்.
நா அப்புறம் கூப்டரேன்..

சரினே.

சரியா நாலு மாசம் கழிச்சு

அண்ணி!
எப்படி இருக்கீங்க.?

வா மாலதி
நல்லா இருக்கோம்;
நீ எப்படி இருக்க?

நல்லா இருக்கே அண்ணி
எங்க வீட்டுக்கரருக்கு; இங்கே
பக்கத்துல தா வேலை; நானும் உங்களைப் பாக்கனும்னு சொன்னே கூட்டியாந்து உட்டுச்சி.

டீ; போடவா; மாலதி

அதலா வேண அண்ணி

சாயங்காலம் புள்ளைங்கள வர சொல்லறேன்; நீங்க
இந்த நகைய
உங்க கையால என் பிள்ளைகளுக்கு போட்டு விடுங்க அண்ணி.

அண்ண கடசியா பணத்தை அனுப்பி புள்ளைங்களுக்கு நகை வாங்க சொன்னுச்சி.

எழுதியவர் : பூ பாலச்சூரியன் (7-Jul-20, 11:40 am)
சேர்த்தது : அப்துல்லாஹ்
Tanglish : thaNgkassi ponnu
பார்வை : 822

மேலே