போய்விடு கொரோனா

வந்தாலும் வந்தது கொரோனா எங்களூர்
குளம்குட்டை நதியும் மண்ணும் வானும்
ஏனிந்த கடற்கரை கூட சுத்தமானது
வீடும் தெருக்களும் சேரிகளும் கூட
மக்களுக்கு புரிந்தது சுற்றுப்புற சூழ்நிலை
உந்தன் வேலை பூர்த்தி கொரோனா
இன்னும் உனக்கிங்கு என்ன வேலை
காணாமல் போய்விடு மறந்துவிடு
சுத்தமாய் மக்கள் வாழ்ந்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jul-20, 9:41 pm)
பார்வை : 91

மேலே