கொடையாளி

கொடையாளி
பாட்டைக் கொடுக்கும் ஒரு பறவை
ஆட்டம் கொடுக்கும் ஒரு பறவை
நாட்டைக் கடக்கும் பல பறவை
வீட்டைக் கெடுப்பதும் தான் முறையோ!
பேச்சுக் கொடுக்கும் ஒரு பறவை
மூச்சாய் கரையும் ஒரு பறவை
வட்டம் அடிக்கும் பல பறவை
திட்டம் போட்டே அழித்தல் முறையோ!
இயற்கை இசையே பறவை சத்தம்
செயற்கை வரவே போனது மொத்தம்
மரங்கள் அழித்தது மனித இனமே
கரங்களை அழித்தது இயற்கைக்கு ரணமே
கோகிலம் கண்டதாரு செங்குயில் கண்டதாரு
தகைவிலான் கண்டதாரு செங்குருகு கண்டதாரு
நிலச்சிறகி கண்டதாரு குள்ளத்தாரா கண்டதாரு
தாழைக்கோழி கண்டதாரு கொண்டலாத்தி கண்டதாரு
செவ்வாயன் கண்டதாரு தையல்சிட்டு கண்டதாரு
சிவப்புச்சில்லை கண்டதாரு ஆற்றுஆலா கண்டதாரு
பவழக்காலி கண்டதாரு சின்னப்பக்கி கண்டதாரு
எல்லாமே தொலைச்சிப்புட்டோம் எல்லாமே இழந்துவிட்டோம்
அ.வேளாங்கண்ணி