இடி, மின்னல்

கடல் நீர் கவர்ந்தெடுத்து,
காற்றோடு சேர்ந்தெழுந்து,
விண்ணில் சேர்த்த மேகம்,
ஆரணங்கு கன்னி போல,
அன்னத்து நடை பயின்று,
வரம்பில்லா அழகியென,
வானிலே வலம் வந்தது.

பிறர் பொருள் கவர்வது,
பிழையின் பெரும் பிழை.
நிலத்தின் பொருள் எடுப்பது,
நீங்காப் பிழையாகும் என்று,
மண்ணில் பறித்ததை, முகில்
மண்ணுக்கே மாரியாய் வழங்கிய
மாண்பால் மகிழ்ந்தது வானம்.

போற்றச் சிந்தித்த வானம்,
பட்டாசுகள் வெடித்து மகிழ,
பட்டாசின் ஓசை இடியாம்.
பளிச்சென்ற ஒளி மின்னலாம்.
வான் வழிந்து மண் விழுந்த
வெள்ளி இழைகள் விளக்கியது.

ச.தீபன்
94435 51706

எழுதியவர் : தீபன் (10-Jul-20, 10:23 am)
பார்வை : 109

மேலே