விவசாயி 🌾💥🙏🏽
விவசாயி🌾🌱💥
விண்ணையும் மண்ணையும்
நன்கு உணர்ந்த
காலத்தையும் நேரத்தையும்
கண்டுபிடித்த
மானுட பிறப்பின் முதல் விஞ்ஞானி.
நீரின் மேன்மை அறிந்து
நிலத்தின் வளம் அறிந்து
மண்ணின் மகிமை அறிந்து
விதையின் விதியை கண்டறிந்துவன்.
கால்நடைகளை அறவனைத்து
காடுமேடுகளையும் கழனியாக்கி
இயற்கையோடு பின்னிப்பினைந்து
தலைக்கனம் கொள்ளாமல் தன்னிலை மாறாத தங்கமகன்.
மண்ணனை பொன்னாக மதித்து
விதையை வீரியமாக்கி
விளைந்து நிற்கும் நெல்மணி கதிர்தனை கடவுளாக போற்றுபவன்.
மாசு இல்லா சூழ்நிலை
கள்ளம்கமடற்ற மனம்
உழைக்கும் சிந்தனை
எளிய வாழ்க்கை முறை
உலகத்துக்கே உணவு அளிக்கும் உன்னதம்
எல்லோர் மனதிலும் எப்போதும் குடியிருக்கும் நம்ம அன்பு "விவசாயி". 🙏🏽
- பாலு.