பூக்காரி

பூக்காரி

புலராத பொழுததிலும்
அவ!ள் முகம் மட்டும்
புலர்ந்ததாய்!

அன்பையும் சேர்த்தே
முடிந்து வைத்தாள்
அவள் மலருக்குள்
இனாமாய்!

சில்லறையின் அளவுக்கு
சிரிப்பின் புழக்கம்
குறைவே அவளிடம்!

அக்குக்கிராமமே ஊறியது
அவள் குடிசையின்
மணத்தில்

கைராசியென
அவள் கை மாலைகள்
நிச்சயித்தன
அநேகர் திருமணத்தை!

அளவிலா மலர் தொடுத்தாள்
அவளுக்கு மலர் தொடுக்க
என்றும் நாரின் நீளம்
போதாததாய்!

தனக்கெனவும் பறித்து வந்தாள்
அவை மட்டும்
அவளைப் போல்
இன்றுவரை மொட்டாக……………… . . ..

சு.உமாதேவி
!

எழுதியவர் : சு. உமாதேவி (10-Jul-20, 10:06 pm)
பார்வை : 96

மேலே