அவள் வருவாள...

💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚

பெண்ணே!
உன் உயிரைப்போல்
என்று என்னை
நீ நேசிப்பாயோ...?

உன் கற்பைப்போல்
என்று என்னை
நீ காப்பாயோ...?

என் நிழலைப்போல்
என்று என்னை
நீ சேர்வாயோ...?

என் மஞ்சத்தைப்போல்
என்று என்னை
நீ சுமப்பாயோ...

உன் மார்பைப்போல்
என்று என்னை
உன் மார்போடு அணைப்பாயோ..?

உன் கைப்பேசியைப்போல்
என்று என்னை
உன் கையிலேயே
பிடித்திருப்பாயோ...?

என் விரல்களைப்போல்
என்று என் கண்ணீர்
துடைக்க வருவாயோ.....

என் மூச்ச காற்றுப்போல்
என்று என்னை
வாழ வைக்க வருவாயோ...

*கவிதை ரசிகன்*


💚❣️💚❣️💚❣️💚❣️💚❣️💚

எழுதியவர் : கவிதை ரசிகன் (10-Jul-20, 8:43 pm)
Tanglish : aval varuvaala
பார்வை : 72

மேலே