தளிர்கள் துளிர்க்கட்டும்
தளிர்கள் துளிர்க்கட்டும்
***********************
தளிர்கள் துளிர்க்கட்டும்
--- தரணியில் தடம்பதித்து
புதிதாய் பிறக்கட்டும்
--புரியா பேய்களிக்கும்
புரியுமாறு சொல்லட்டும்
--பகுத்தறிவில் பாரதிற்கு
பரவசமாய் இருக்கட்டும்
--தொட்டாலே பட்டாலே
மிதிக்கின்ற கனல்களை
--முடுக்கி வீசட்டும்
பருவத்திலும் மயங்காது
--பக்குவத்தில் மயங்கி
இளமையை காக்கட்டும்
--மலரிலும் இனிமையை
காலமெல்லம் காத்து
--தளிர்கள் துளிர்க்கட்டும்
அகிலன் ராஜா கனடா