சுதந்திரக்_காற்று
தலைப்பு : #சுதந்திரக்_காற்று
******************
சுதந்திரத்தின் வசந்தங்கள் உரிமையில் விளைந்தாலே
அற்புதங்களும் கனவுகளும் பிறப்புக்கொண்டு நிற்கும்
சுதந்திரக் காற்றின் கனவினை இழந்து
சுருண்டு விழும் இயற்கையின் உயிர்
தோல்விகளின் நெகிழ்ச்சியிலே வலிமையை இழக்கிறது
பெருமிதங்களில் பெரும்பங்காற்றி பெருமையை வளர்க்கவே
நெருக்கமும் விருப்பமும் உருவாகி வளரும்
சுதந்திரக் காற்றும் சுகமாய் மலரும்
அகிலன் ராஜா