கைபேசி பார்வையில்
திருமணநாட்கள் சில
பிறந்தநாட்கள் பல
சுற்றுலாக்கள் சில
திருவிழாக்கள் பல
கசப்புக்கே இடமில்லை
மகிழ்ச்சியான தருணங்கள்
மட்டுமே பதிவுகளாகிருந்தன
புகைப்பட கேலரியில்
வாழ்கையே அழகாய் தெரிகிறது
உன் விழிவழி பார்வையில்
இனி உன் வழியே என் வழி
மனதில் ஓடிய எண்ண ஓட்டம்
கைபேசியை பார்த்துக் கொண்டே இருக்கையில்!