அழிவில்லாத கவிஞன்
கவிஞனுக்கு
கட்டுபாடு இல்லை..
அவனுக்கு வானமே
எல்லை என்று
வாழ்ந்தான்
கண்ணதாசன்...! !
கட்டுபாடு இல்லாத
காட்டாற்று
வெள்ளம் போல்
காலத்தாலும்
அழிக்க முடியாத
திரைப்பாடல்கள்
ஆயிரமாயிரம்
படைத்தான்....! !
நான்....
நிரந்திரமானவன்
அழிவதில்லை...
எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை...! !
அவனது பாடல்வரிகள்
போல்....என்றும்
அழிவில்லாதவன்
அகிலம் உள்ளவரை...! !
--கோவை சுபா